ADDED : ஜூலை 22, 2026 11:33 PM
தேனி: ஆவின் நிறுவனம் விற்பனையாளர்களுக்கு உயர்த்திய நெய் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆவின் நெய் 100 மி.லி., ரூ.85, 200 மி.லி., ரூ.160, 500 மி.லி., ரூ.365, ஒரு லிட்டர் ரூ.700க்கு விற்பனை செய்தது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் விலையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால், மொத்தமாக கொள்முதல் செய்பவர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கான விலையை கடந்த வாரம் ஆவின் உயர்த்தியது.
அதாவது மொத்த விற்பனையாளர்களுக்கு 500மி.லி., ரூ.327.17ல் இருந்து ரூ. 332.42க்கும், ஒரு லிட்டர் ரூ. 627.62 ல் இருந்து ரூ. 650.72க்கும், சில்லரை விற்பனையாளர்களுக்கு 500 மி.லி., ரூ.339.45ல் இருந்து ரூ. 342.60க்கும், ஒரு லிட்டர் ரூ.651.13ல் இருந்து ரூ.664.78 க்கும் உயர்த்தி கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த விலை உயர்விற்கு விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பழைய விலையிலேயே விற்பனையாளர்களுக்கு நெய் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.ஆர்.பி.,யில் மாற்றம் இல்லை.
