ADDED : ஜூலை 22, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
தேனி: பெரியகுளம் சில்வார்பட்டி தெற்கு அங்கன்வாடி அமைப்பாளர் எழிலரசி. இவர் அங்கன்வாடிமையத்தில் பணி நேரத்தில் சீருடையில் இருந்தவாறு சினிமா பாடலுக்கு 'ரீல்ஸ்' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இது மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மற்றும் கலெக்டர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து எழிலரசியை 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.
