/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அப்துல்கலாம் பிறந்தநாள் அறிவியல் கண்காட்சி
/
அப்துல்கலாம் பிறந்தநாள் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 16, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வடபுதுப்பட்டியில் செயல்படும் தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தாள் விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து பள்ளி செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் விஜய், கார்த்திகேயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.