/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தலைமறைவான தொழிலாளிக்கு போக்சோவில் 10 ஆண்டு சிறை
/
தலைமறைவான தொழிலாளிக்கு போக்சோவில் 10 ஆண்டு சிறை
ADDED : நவ 02, 2025 02:19 AM
தேனி: தேனியில் சிறுமியை பலாத்காரம் செய்து 8 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள பிரகடனப்படுத்தப்பட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த 14 வயது சிறுமி 2017 மார்ச்சில் விடுதியில் இருந்து மாயமானார். விடுதி காப்பாளர் புகாரில் போலீசார் வழக்கு பதிந்தனர். சிறுமியின் உறவினரான வேடசந்துார் சிவராஜ் 41, சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்தது தெரிந்தது. பின் மார்ச் 31ல் சிவராஜை போலீசார்கைது செய்தனர். சிவராஜ் 2017 ஜூன் 16ல் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் தலைமறைவானார். அவரை கடந்த ஏப்., 9ல் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணை நடந்தது. இதில் சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை ரூ.5ஆயிரம் அபராதம், அதனை கட்ட தவறினால் 6 மாத சிறை என மொத்தம் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு அபராத்தொகையுடன் சேர்த்து ரூ.7 லட்சம் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். இதில் ரூ. 2 லட்சம் சிறுமியின் பராமரிப்பு, கல்வி செலவிற்கும், ரூ.5 லட்சம் நிரந்த வைப்பீடு செய்து, அதனை சிறுமி உரிய வயதிற்கு பின் பெற்றுக்கொள்ள ஆணையிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜராகினார்.

