/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தண்ணீர் டேங்கருடன் சென்ற டிராக்டர் சக்கரம் புதைந்து விபத்து
/
தண்ணீர் டேங்கருடன் சென்ற டிராக்டர் சக்கரம் புதைந்து விபத்து
தண்ணீர் டேங்கருடன் சென்ற டிராக்டர் சக்கரம் புதைந்து விபத்து
தண்ணீர் டேங்கருடன் சென்ற டிராக்டர் சக்கரம் புதைந்து விபத்து
ADDED : அக் 11, 2025 04:48 AM

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி 10வது வார்டு பொட்டல்குளம் செல்லும் ரோடு, மதுரை ---தேனி ரோட்டிற்கும், ஆண்டிபட்டி- வைகை அணை ரோட்டிற்கும் இணைப்பு ரோடாக உள்ளது.
குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதி வழியாக கனரக வாகனங்களை இயக்கி அடிக்கடி இடையூறு ஏற்படுத்துகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிப்பிற்காக சில வாரங்களுக்கு முன் பள்ளம் தோண்டி மூடப்பட்டது. அதிக வாகனங்கள் சென்று வருவதால் இந்த ரோடு குண்டும் குழியுமாக மாறிவிட்டது. நேற்று தண்ணீர் டேங்கருடன் டிராக்டர் இந்த ரோடு வழியாக சென்றது. கடந்த இரு நாட்களாக பெய்த மழையில் குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்ட இடம் நெகிழ்வுத் தன்மையுடன் இருந்தது.
தண்ணீருடன் இருந்த டேங்கரின் எடை தாங்காமல் வலது பின் சக்கரம் திடீரென மண்ணில் புதைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. டேங்கரில் இருந்த நீரை வெளியேற்றிய பின் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண்ணில் புதைந்த டிராக்டரின் சக்கரம் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.