/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடைகள் மூடியிருந்ததால் விபத்து தவிர்ப்பு
/
கடைகள் மூடியிருந்ததால் விபத்து தவிர்ப்பு
ADDED : ஜூலை 28, 2025 03:17 AM

மூணாறு: மூணாறில் நேற்று முன்தினம் மாலை பெய்த தீவிர மழையால் நகரை சுற்றி பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நகரில் உள்ள மவுண்ட் கார்மல் சர்ச் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அதனை நேற்று காலை சர்ச் நிர்வாகத்தினர் தாங்களாகவே சீரமைத்தனர்.
பழைய மூணாறு ரோட்டில் நகரை ஒட்டி 50க்கும் மேற்பட்ட வழியோரக்கடைகள் உள்ளன. அப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஐந்து கடைகள் சேதமடைந்தன. ஏற்கனவே பாதுகாப்பு கருதி கடைகள் மூடப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருவதால் அங்குள்ள வழியோரக் கடைகளை பாதுகாப்பு கருதி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.