/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரவுண்டானாவால் தொடரும் விபத்துக்கள்
/
ரவுண்டானாவால் தொடரும் விபத்துக்கள்
ADDED : டிச 04, 2025 05:08 AM

தேனி: வீரபாண்டி அருகே விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட ரவுண்டானா அகலமாக உள்ளதால் விபத்துக்கள் தொடர்கிறது. கடந்த வாரம் நடந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.
தேனியில் இருந்து முத்துத்தேவன்பட்டி வழியாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலை, திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலைகள் முல்லைப்பெரியாற்று பாலம் அருகே சந்திக்கின்றன. இந்த சந்திப்பு விபத்துக்கள் அடிக்கடி நடந்தது. இதனால் குறிப்பிட்ட சந்திப்பில் ரவுண்டானா, உயர்மின் கோபுரம் விளக்குகள் அமைக்க சாலைபாதுகாப்பு குழுவால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வீரபாண்டி பிரிவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த ரவுண்டானா ரோட்டின் அளவை விட சரிபாதிக்கு மேல், அகலமாக அமைக்கப்பட்டது. இதனால் அந்த ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது.
இந்த ரவுண்டானாவில் மோதி கடந்த சில தினங்களில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள், ஆம்னி பஸ் என 3 வாகனங்களுக்கு மேல் விபத்தில் சிக்கி உள்ளன.
விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட ரவுண்டானாவால் விபத்துக்கள் தொடர்கிறது. அந்த ரவுண்டானாவில் அகலத்தை குறைத்து விபத்துக்களை தடுக்க போலீசார், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

