/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட சிலம்ப போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாவட்ட சிலம்ப போட்டி பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 13, 2024 04:34 AM

கம்பம் : மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகளில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தேனி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பாட்ட போட்டிகள் தேனி பூர்ண வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப் போட்டியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பொதுப்பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். 8 வயது முதல் 11 வயது பிரிவில் சால்வின் மிதுன், ஹேம தர்ஷினி, கோபி, தர்ஷிகா, தமிழ்செல்வன் ஆகியோர்களும், 8 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் சர்வன் பிரகதி, தர்ஷன், நிதர்சன், தரணிகா, நிரஞ்சன் குமார், முகமது இலியாஸ் ஆகியோரும், 12 வயதுக்கு மேல் பிரிவில் தரணிஷ் அய்யனார், சிறப்பு பிரிவில் ஜோயல் சாக்சன், ஸ்ரீராம், சஷ்டி கன் ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் காந்தவாசன், இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா ஆசிரியர் துரைராஜேந்திரன் பாராட்டினர்.