/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
/
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
ADDED : மே 18, 2025 03:27 AM

கம்பம்,: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி சுஜிதா 5-00க்கு 493 ,பெற்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.
இப் பள்ளி மாணவர்கள் சாதனா ஸ்ரீ 490, மோஹித் 489 பெற்று பள்ளி அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர். தேர்வு எழுதிய 133 பேர்களும் தேர்ச்சி பெற்று நூறு சதவீத தேர்ச்சி பெற்றனர். 480 க்கு மேல் 11 பேர், 450 க்கு மேல் 47 பேர், 400 க்கு மேல் 81 பேர் பெற்று சாதனை படைத்தனர்.
அறிவியல் பாடத்தில் 7, சமூக அறிவியலில் 4, கணிதத்தில் 2 பேர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர்.
சாதனை மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் காந்த வாசன், இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் ஆகியோர் பாராட்டினர்.