/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை
/
வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை
ADDED : மார் 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடப்பாண்டில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிம கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவற்றை செலுத்துவதற்கு கடைசி நாள் மார்ச் 31 ஆகும். பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அல்லது ஆன்லைன் மூலம் வரி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
வரி செலுத்தாதவர்கள் மீது ஊராட்சி சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் எச்சரித்துள்ளார்.