/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிகளை பின்பற்றாத இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
விதிகளை பின்பற்றாத இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 03, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட தொழிலாளர் அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சிவக்குமார் தலைமையில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம் பகுதி தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து குறைந்த பட்ச ஊதிய சட்டம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
எரிபொருள் விற்பனை நிலையங்கள், பேக்கரிகள், பொம்மை விற்பனை நிலையங்கள், டிக்கெட் புக்கிங் சென்டர்கள் உள்ளிட்ட 10 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிகளை பின்பற்றாத 2 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இந்நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.