/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை
/
உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை
ADDED : செப் 03, 2025 05:43 AM
தேனி, : மனநல சிகிச்சை மையங்கள் ஒரு மாத காலத்திற்கு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து உரிமம் பெறாமல் செயல்படும் மையங்கள் பதிவு செய்ய மாநில மனநல ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலர், அரசு மனநல காப்பக வளாகம், மேடமாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும் மையங்கள், உரிமம் பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.