/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிவுநீர் செல்ல வழியின்றி அமைக்கப்பட்ட சாக்கடை பணியால் அவதி தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன் காலனியில் வசதி இன்றி மக்கள் குமுறல்
/
கழிவுநீர் செல்ல வழியின்றி அமைக்கப்பட்ட சாக்கடை பணியால் அவதி தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன் காலனியில் வசதி இன்றி மக்கள் குமுறல்
கழிவுநீர் செல்ல வழியின்றி அமைக்கப்பட்ட சாக்கடை பணியால் அவதி தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன் காலனியில் வசதி இன்றி மக்கள் குமுறல்
கழிவுநீர் செல்ல வழியின்றி அமைக்கப்பட்ட சாக்கடை பணியால் அவதி தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன் காலனியில் வசதி இன்றி மக்கள் குமுறல்
ADDED : செப் 03, 2025 05:44 AM

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பேரூராட்சி 14 வது வார்டு கக்கன்ஜி காலனி பகுதியில், அவசர கதியில் போடப்பட்ட சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இதனை பொதுமக்கள் வாளியில் எடுத்து ஊற்றி கடத்தும் அவலம் தினமும் தொடர்கிறது.
கக்கன்ஜி காலினியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாய கூலி வேலை செய்கின்றனர். இப்பகுதி குடியிருப்போர் சவுந்திரபாண்டி, அழகு, முத்துலட்சுமி,காமாட்சி ஆகியோர் தினமலர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது:
பேரூராட்சி நிர்வாகம் இப் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. வீடுகளுக்கு மின் இணைப்பு வசதி செய்து தரவில்லை. பொதுமக்கள் வீட்டுவரி ரசீதை இணைத்து மின்துறை அலுவலகத்தில் கொடுத்து பல மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் இரவில் வீட்டிற்குள் நுழையும் விஷ பாம்புகளை அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் விரட்டி விடும் அவலம் தொடர்கிறது.
கணக்கு காட்டுவதற்கு சாக்கடை பணி: 14வது வார்டில் 15 வது நிதிக்குழு மானியத்தில் ரூ.3 லட்சத்தில் சாக்கடை கட்டும் பணி நடந்தது. இப் பணியில் கழிவுநீர் எந்த வழியாக கொண்டு சென்று கடத்த வேண்டும் என திட்டமிடாமல் கணக்கு காட்டுவதற்கு சாக்கடை கட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாக்கடையில் நிரம்பி வீட்டிற்குள் செல்கிறது. வீட்டிற்குள் வரும் கழிவுநீரை பொதுமக்கள் வாளியில் சேகரித்து வேறொரு சாக்கடையில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு அவதிப் படுகின்றனர்.
குழாய் வசதி இல்லை பொதுக்குழாய் குடிநீர் அமைக்கும் பணி முழுமையடையாததால் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை உள்ளது. குறைந்த பட்சம் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து போர்வெல் தண்ணீர் கூட வழங்கவில்லை. தெருவுக்குள் நுழையும் பகுதியில் பழைய சினிமா தியேட்டர் பகுதியில் முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனை வெட்டி அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
குப்பையால் சுகாதாரக்கேடு தெருக்களில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை. இதனால் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. குப்பையை அகற்றாமல் தீ வைத்து வருகின்றனர். தேவதானப்பட்டி பேரூராட்சியில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அடிப்படை வசதி செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.