/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை அவசியம்
/
மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூன் 30, 2025 04:23 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மேம்படுத்துவதில் பிற துறைகள் அனுமதி தேவைப்படுகின்றன. இதனால் இவற்றை மேம்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் மிக அதிகம் உள்ளன.
சுருளி, கும்பக்கரை, சின்னசுருளி, குரங்கணி, கொட்டக்குடி, போடி மெட்டு, மேகமலை, சோத்துப்பாறை அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை என பல சுற்றுலா தலங்கள் உள்ளன.
இம்மாவட்டத்தில் ஆண்டிற்கு 3, 4 மாதங்களை தவிர அனைத்து மாதங்களும் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
ஆனால், இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை, பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இதனால் இங்கு ஏதேனும் புதிய சுற்றுலா திட்டங்கள் அமல்படுத்துவதில் வனத்துறை, பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் ஏராளம் இருந்தும், சுற்றுலா தொழில் வளர்ச்சி என்பது கானல் நீராக உள்ளது.
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சளாறு அணையில் படகு குழாம், மிதக்கும் ஓட்டல் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் நின்று போனது. மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.