/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்திற்கு வித்திடும் இருள் சூழ்ந்த தேனி போடேந்திரபுரம் விலக்கு மின்விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை

ADDED : ஜூலை 14, 2025 02:47 AM

தேனி: தேனி குமுளி நெடுஞ்சாலையில் போடேந்திபுரம் விலக்கு பகுதியில் இரவில் விளக்கு வசதி இல்லாததால் விபத்து அபாயம் தொடர்கிறது.
திண்டுக்கல் - குமுளி ரோட்டில் போடேந்திரபுரம் விலக்கு பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேனி வழியாக குச்சனுார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு செல்லும் முக்கிய வழியாகும்.
இந்த விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வகையில் முத்துதேவன்பட்டி உப்புக்கோட்டை இடையே மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஆனால், இந்த ரோடு சந்திப்பு பகுதியில் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் நடந்து, டூவீலர்களில் ரோட்டை கடப்பவர்கள் பற்றி தேசிய நெடுஞ்சாலையில் வருபவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அப்பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைத்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.