/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் ஆக்கிரமிப்பு அதிகம்: அகற்ற நடவடிக்கை தேவை
/
கம்பத்தில் ஆக்கிரமிப்பு அதிகம்: அகற்ற நடவடிக்கை தேவை
கம்பத்தில் ஆக்கிரமிப்பு அதிகம்: அகற்ற நடவடிக்கை தேவை
கம்பத்தில் ஆக்கிரமிப்பு அதிகம்: அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : நவ 12, 2025 12:35 AM
கம்பம்: கம்பம் நகரில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. நகராட்சி ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகளில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நகரில் பல வீதிகள் ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது. பொதுமக்கள் நடக்க கூட முடியாத வகையில் பல தெருக்கள் உள்ளன.
தெருக்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய நகரமைப்பு பிரிவு அலுவலர்கள், கமிஷனரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இதனால் கம்பமெட்டு ரோடு, விவேகானந்தர் தெரு, செல்லாண்டியம்மன் கோயில் தெரு,பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, ஓடைக்கரை தெரு,குட்டியா பிள்ளை தெரு, தியாகி வெங்கடாச்சலம் தெரு, பார்க் ரோடு, காந்திஜி தெரு, உழவர் சந்தை தெரு என பெரும்பாலான தெருக்களில் நடக்க கூட முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது.
குறிப்பாக உழவர் சந்தை தெரு, காந்திஜி தெரு, பார்க் ரோடு, தியாகி வெங்கடாச்சலம் தெருக்களில் கடும் நெருக்கடியில் உள்ளது. இந்த தெருக்களில் நடப்பதை பொதுமக்கள் தவிர்க்கும் நிலைக்கு வந்து விட்டனர்.
நகராட்சி நிர்வாகமோ வேடிக்கை பார்த்து வருகிறது. ஆக்கிரமிப்புக்களை அகற்றி பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறின்றி செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

