/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கம்பம் நகராட்சி தலைவர் தகவல்
/
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கம்பம் நகராட்சி தலைவர் தகவல்
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கம்பம் நகராட்சி தலைவர் தகவல்
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கம்பம் நகராட்சி தலைவர் தகவல்
ADDED : ஜன 06, 2024 06:46 AM
கம்பம்: கம்பத்தில் திரியும் தெருநாய்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தலைவர் வனிதா தெரிவித்தார்.
கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் நடந்தது.கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், சுகாதார அலுவலர் அரசகுமார் முன்னிலை வகித்தனர்.
கம்பத்தில் வீதிக்கு வீதி தெரு நாய் கூட்டங்கள் சுற்றி திரிகிறது. பலர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று ருகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்துவது எப்போது என தி.மு.க. கவுன்சிலர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த தலைவர், நகராட்சியில் 879 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாயை பிடித்து கருத்தடை செய்து வெறிநோய் தடுப்பூசி போட ரூ.1650 அரசு அனுமதித்துள்ளது. அதற்கான செலவை பொது நிதியில் மேற்கொள்ளவும், பின்னர் அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் அதற்கென உள்ள தன்னார்வலர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது அவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். விரைவில் இப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அரசமரம் அருகில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி மூன்று கடைகளை மட்டும் அகற்றியுள்ளீர்கள். பார்க் ரோடு, காந்திஜி வீதி, நகராட்சி வீதிகளில் நடக்க கூட முடியவில்லை. அங்கெல்லாம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது என்றார் கவுன்சிலர் செந்தில்குமார்.
பதில் கூறிய தலைவர், 'வாரச்சந்தையை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வாரச்சந்தையை திறந்தவுடன் ரோட்டோர ஆக்கிரமிப்பு வியாபாரிகள் வார சந்தைக்குள் சென்றுவிடுவார்கள். பின்னர் வீதிகள் ஆக்கிரமிப்பு இருக்காது. கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.