/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செறிவூட்டிய அரிசியை பிளாஸ்டிக் அரிசி என கருதி பயன்படுத்தாத நிலை; விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

ADDED : செப் 25, 2024 05:21 AM

தேனி: தேனியில் தண்ணீரில் மிதக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் பொது மக்கள், ரேஷன் அரிசியை பயன்படுத்தாமல் வீட்டிலேயே வைத்திருக்கும் நிலை தொடர்கிறது.
இந்நகராட்சி 5வது வார்டு கம்பர் தெரு மூதாட்டி சரஸ்வதி 70. இவர் மகன் குடும்பத்தினருடன் வசிக்கிறார். இவர் கூறியதாவது: ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி வாங்கினேன். இந்த அரிசியை தண்ணீரில் நனைத்து அலசும் போது, வெண்மை நிற அரிசிகள் மேலே மிதக்கின்றன. இதனால் பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பயன்படுத்தாமல் வைத்துள்ளேன் என்றார். இதுபோன்று அப்பகுதியில் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் ரேஷன் அரசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்குவதால் விழிப்புணர்வு இன்றி பயன்படுத்தாமல் வைத்திருந்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தேனி மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் கூறியதாவது: செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் என்பது, அரிசியை மாவாக்கி அரைத்து, அதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. பிறகு அரிசி வடிவில் மாற்றப்பட்டு, 100 கிலோவிற்கு ஒரு கிலோ என்ற சரிவிகிதமாக புழுங்கல், பச்சரிசியுடன் கலக்கப்படுகிறது.
மாவு போன்று அரிசி இருப்பதால் தண்ணீரில் நனைத்தவுடன் மேலே மிதக்கிறது. இது பிளாஸ்டிக் அரிசி இல்லை. உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்தது. இதனால் ரேஷன் அரிசியை தாராளமாக சமைத்து சாப்பிடலாம். இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து, தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.', என்றார்.