/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதுகாப்பு அறைக்கு வந்த கூடுதல் ஓட்டுப்பெட்டிகள்
/
பாதுகாப்பு அறைக்கு வந்த கூடுதல் ஓட்டுப்பெட்டிகள்
ADDED : டிச 10, 2024 06:24 AM

தேனி: தேனி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கூடுதல் ஓட்டுப்பெட்டிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டன.
லோக்சபா தேர்தலுக்கு முன் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. தேர்தலின் போது ஏதேனும் பழுது ஏற்பட்டால் மாற்றிக்கொள்ள கூடுதல் ஓட்டுப்பெட்டிகள் அனுப்பப்பட்டன.
தேர்தல் முடிந்த பின் அனைத்து தொகுதியிலும் கூடுதலாக அனுப்பப்பட்டிருந்த மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் தேர்தல் அணையத்தின் ஒப்புதலோடு தாலுகா அலுவலகத்தில் இருந்த பேலட் யூனிட் 537, கட்டுப்பாட்டு அலகு 288, வி.வி.,பேட் 369 என அனைத்து இயந்திரங்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

