/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் ரூ.20 கோடியில் கூடுதல் கட்டடம்
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் ரூ.20 கோடியில் கூடுதல் கட்டடம்
தேனி மருத்துவக் கல்லுாரியில் ரூ.20 கோடியில் கூடுதல் கட்டடம்
தேனி மருத்துவக் கல்லுாரியில் ரூ.20 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : நவ 23, 2024 06:19 AM
தேனி; தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மத்திய அரசின் பாரத பிரதமர் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கூடுதல் தீவிர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டட பணிகள் துவங்கியது.
இம்மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சுமார் 4 ஏக்கர் காலியிடம் செடி கொடிகளாக இருந்தன. இப்பகுதிசமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டது. அங்கு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டுமானப் பணி துவக்கியுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவில் 300 படுக்கைகள் கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும், சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. இப்பிரிவுக்கான கூடுதல் சிகிச்சை மையங்கள், அறுவை சிகிச்சை அரங்குகளை கொண்ட கட்டடம் கட்டப்பட உள்ளது. இப்பணிகளை ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுபணித்துறை ஒப்பந்தாரர் நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது.