UPDATED : செப் 07, 2026 10:15 PM
ADDED : செப் 07, 2026 09:22 PM
தேனி:தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் வாகன நிறுத்தம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி., பிரவின் கவுதம் வலியுறுத்தி உள்ளார்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேரு சிலை பகுதி, பெரியகுளம், கம்பம், மதுரை ரோடுகளில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள் திரும்புவதற்கு போதிய இடவசதி இன்றி ரோட்டை வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆம்புலன்ஸ் கூட சில நேரம் செல்ல முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றன. எஸ்.பி., பிரவீன் கவுதம் கூறுகையில், 'தேனியில் நேரு சிலையை சுற்றி ரோடுகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள நிறுத்தத்தில் டூவீலர்கள் நிரம்பி உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கலாம். அப்போது தான் நகரில் நெரிசல் குறையும் என்றார்இதுபற்றி நகராட்சி அதிகாரிகளுடன் போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
