கலெக்டர், எஸ்.பி., ஆபீஸ்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
கலெக்டர், எஸ்.பி., ஆபீஸ்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
UPDATED : செப் 26, 2026 05:40 PM
ADDED : செப் 26, 2026 05:32 PM
தேனி:மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகமலை, வருஷநாடு உள்ளிட்ட 98 மலை கிராம மக்கள், கடமலைக்குண்டு பஸ் ஸ்டாண்டில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.
காத்திருப்பு போராட்டம் எதிரொலியாக தேனி கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்து கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன. இதனால் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை ரோட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் கலெக்டர் அலுவலக பின்புற நுழைவு வாயில் வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
