/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரங்கள் போதிய கையிருப்பு உள்ளது; வேளாண் இணை இயக்குனர் தகவல்
/
உரங்கள் போதிய கையிருப்பு உள்ளது; வேளாண் இணை இயக்குனர் தகவல்
உரங்கள் போதிய கையிருப்பு உள்ளது; வேளாண் இணை இயக்குனர் தகவல்
உரங்கள் போதிய கையிருப்பு உள்ளது; வேளாண் இணை இயக்குனர் தகவல்
ADDED : அக் 28, 2024 07:01 AM
தேனி : 'மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளது.' என, வேளாண்துறை இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் 73 வேளாண், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், 227 தனியார் விற்பனை நிலையங்கள், 8 வேளாண் விரிவாக்க, துணை மையங்கள் மூலம் வினியோக்கிக்கப் படுகின்றன. மாவட்டத்தில் தற்போது யூரியா 1532 டன், டி.ஏ.பி., 573 டன், பொட்டாஷ் 563 டன், காம்ப்ளக்ஸ் 3302 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளன.
தற்போது வேளாண் விளைப் பொருட்கள் சாகுபடிக்கு போதிய அளவில் உள்ளன. உரங்கள் விற்பனை செய்யும் கடைகள், மையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. கையிருப்பு விபரங்கள், விலைப் பட்டியல் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப் படுத்தியிருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்து உள்ளனர்.