/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
/
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : செப் 29, 2024 06:30 AM
தேனி : சீனியாரிட்டி பட்டியல் வெளியிடுவது தொடர்பாக வருவாய்த்துறையில் இரு சங்கங்கள் இடையே பிரச்னை நீடித்து வந்தது. கலெக்டர் ஷஜீவனா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மாவட்டத்தில் கடந்தாண்டு துணை தாசில்தார் பணியிடத்திற்காக வெளியிட்ட சீனியாரிட்டி பட்டியில் தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், வருவாயத்துறை(குரூப்-2) நேரடிநியமன அலுவலர்கள் சங்கத்தினர் இடையே பிரச்னை எழுந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்வெளியிட்ட பட்டியலை ரத்து செய்ய கோரி தர்ணா, தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அக்., 1 முதல் தொடர் ஈட்டிய விடுப்பு எடுத்து போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கலெக்டரிடம் சங்க மாநில நிர்வாகிகள் முருகையன், சங்கரலிங்கம், தமிழரசன், மாவட்டத்தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அக்.,1ல் அறிவிக்கப்பட்ட போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர்.