/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் வரி செலுத்தாமல் பொதுமக்கள் இழுத்தடிப்பு நிதி நெருக்கடியில் திணறும் நிர்வாகம்

ADDED : டிச 20, 2024 03:40 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி மூலம் விதிக்கப்படும் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை மார்ச் இறுதிக்குள் பொதுமக்கள் செலுத்த வேண்டும்.
பெரும்பாலான ஊராட்சிகளில் வரி வசூலுக்கு தனியாக ஆட்களை நியமித்து வசூல் செய்தாலும் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் கூடுதலான சிரமங்களை ஊராட்சி நிர்வாகங்கள் சந்திக்க வேண்டி உள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சிகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரிகள் மூலம் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த பணம் மூலம் பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு ஊராட்சியிலும் வரி பாக்கியாக ரூபாய் சில லட்சங்கள் நிலுவையில் உள்ளன.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. அரசு மூலம் ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் கடந்த சில மாதங்களாக குறைவாகவே கிடைக்கிறது.
குறைவான நிதியால் குடிநீர், சுகாதார பராமரிப்பு கூட செய்ய முடியாமல் திணறும் நிலை உள்ளது. தற்போது ஊராட்சிகளுக்கான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டி இருப்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
வசூலிக்கும் பணத்திற்கு உடனடி ரசீது வழங்குவதிலும் சிரமம் உள்ளது. ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் வரிகள் செலுத்துவதின் அவசியம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.