/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க.,வில் இணைந்த ச.ம.க., நிர்வாகிகள்
/
அ.தி.மு.க.,வில் இணைந்த ச.ம.க., நிர்வாகிகள்
ADDED : மார் 14, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பா.ஜ., கட்சியுடன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் குணசேகரன்,கம்பம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் தனிக்கொடி ஆகியோர் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர்முன்னிலையில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன், கம்பம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர் தயாளன், அம்மா பேரவை செயலாளர் ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல துணைச் செயலாளர் பாலசந்தர், கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

