/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து தடை செய்து விளம்பர படப்பிடிப்பு
/
போக்குவரத்து தடை செய்து விளம்பர படப்பிடிப்பு
ADDED : டிச 13, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், மூணாறு அருகே கேப் ரோட்டில் நேற்று காலை கார் நிறுவனத்தின் விளம்பர படபிடிப்பு நடந்தது.
அப்போது வாகனங்கள் செல்ல அனுமதிக்காததால் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. அதில் பணிக்கு மற்றும் அவசர தேவைக்கு செல்வோர் சிக்கி கொண்டனர். அதனால் படபிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன், பட குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவிகுளம் போலீசார் பட குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். போக்குவரத்து சரியான நிலையில் படபிடிப்பு சுமூகமாக நடந்தது.

