/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கறவை மாடுகளை வெயிலில் இருந்து பாதுகாக்க ஆலோசனை
/
கறவை மாடுகளை வெயிலில் இருந்து பாதுகாக்க ஆலோசனை
ADDED : ஏப் 19, 2025 01:15 AM
ஆண்டிபட்டி,:
கறவை மாடுகளை வெயிலில் இருந்து பாதுகாக்க கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆண்டிபட்டி கால்நடை மருந்தக டாக்டர் ஆதிரா கூறியதாவது: தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது.
பச்சை உலர்ந்த, தீவனங்கள், குச்சி பிண்ணாக்கு, தாது உப்புக்கள், ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும்.
காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கால்நடைகளை வெயிலில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக்கூடாது. மேச்சலுக்கு சென்று வந்ததும் தேவையான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கு தண்ணீர் வசதி மிகவும் முக்கியம். இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாட்டின் உடல் சூட்டை அவ்வப்போது தண்ணீர் ஊற்றி குறைக்க வேண்டும். வெயிலால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

