/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தினமும் 20 வீடுகளுக்கு சென்று பிரசாரம் செய்ய அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை

ADDED : மார் 15, 2024 06:34 AM
தேனி : தேனி லோக்சபா தொகுதியில் தினமும் 20 வீடுகளுக்கு சென்று பிரசாரம் செய்ய அ.தி.மு.க., களப்பணியாளர்களுக்கு அறிவுருத்தி உள்ளனர்.
தேனி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் பணியினை மாவட்ட செயலாளர்கள் நேரடி கவனம் செலுத்துகின்றனர். இதன்படி கிழக்கு மாவட்டத்தில் 4600 பேரும், தெற்கு மாவட்டத்தில் 4500 களப்பணியாளர்கள், வார்டு செயலாளர்கள், உறுப்பினர்களுடன் இணைந்த பணியாற்ற நியமிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க., களப்பணியாளர்கள் தி.மு.க., பா.ஜ., காங்., ம.தி.மு.க., கட்சி உறுப்பினர்களிடம் பேசி அவர்களின் ஓட்டை அ.தி.மு.க.,வசம் கொண்டு வர தினந்தோறும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களுடன் பேசி பிரசாரம் செய்ய ஆலோசனை வழங்கி உள்ளனர்.
அ.தி.மு.க., செயலாளர்கள் கூறுகையில், அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த குடும்பத்தினர், வாரிசுகள், உறவினர்கள் என தினந்தோறும் வாக்காளர்களை சந்திக்கவும், பிற கட்சியினரிடமும் பேச வலியுறுத்தி உள்ளனர்.
ஓட்டுச்சாவடி வாரியாக முந்தைய தேர்தலில் அ.தி.மு.க.,பெற்ற ஒட்டுக்களை தவிர கூடுதல் ஓட்டு பெற ஒரு செயலாளர் 200 வாக்காளர்களை ஓட்டுப்பதிவு நாள் வரை சந்திக்க அறிவுறுத்தி உள்ளனர் என்றனர்.