/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பப்பாளியில் வைரஸ் நோய் கட்டுப்படுத்த ஆலோசனை தோட்டக்கலை துணை இயக்குநர் தகவல்

ADDED : பிப் 05, 2025 07:18 AM
தேனி: பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா கூறிய ஆலோசனைகள்:
மாவட்டத்தில் 142 எக்டேரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் பப்பாளியில் வைரஸ் தாக்குதல் காணப்படுகிறது. வளைப்புள்ளி வைரஸ் நோய் அசுவினி பூச்சிகள் மூலம்பரவ கூடியது. பாதித்த செடியின் இலை நரம்புகள் தெளிவாகவும், திசுக்கள் சுருங்கி காணப்படும். விளிம்பு இலைகள் கீழ் நோக்கி சுருளும். இலைகளில் கரும்பச்சை நிறு கொப்பளம், பல வண்ண புள்ளியமைப்பு காணப்படும். பாதிக்கப்பட செடிகளின் பழங்களில் வளைப்புள்ளிகள் காணப்படும்.
இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நோய் தாக்குதல் இல்லாத பப்பாளி நாற்றுகளை பயிரிட வேண்டும். பப்பாளி பயிரிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் வரப்புகளில் சோளம் பயிரிடலாம்.அருகில் பாகல், பூசணி உள்ளிட்ட கொடிவகை காய்கறிகளை தவிர்க்க வேண்டும். பாதித்த செடிகளை அகற்ற வேண்டும். நடவு செய்த பின் மாதம் ஒரு முறை பைசீத்தோயேட் மருந்தை ஒரு லிட்டருக்கு 1.5 மி.லி., வீதம் 5 மாதங்கள் தெளிக்க வேண்டும். மேலும் 4,7 வது மாதங்களில் ஜிங்க் சல்பேட், போரான் தெளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.