நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சின்னமனுார் தனியார் திருமண மண்டபத்தில் வள்ளுவர் உறவின்முறை தலைமை சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநாடு கமிட்டி தலைவர் சேதுராம் தலைமை வகித்தார். சங்க தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2024 ஜூனில் நடக்க உள்ள மாநாட்டு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் வாசுதேவன், பொருளாளர் சத்தீஸ்வரன், செயலாளர் சுப்புராஜ், துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.