/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுாரை தொடர்ந்து கம்பத்திலும் துவங்கியது நெல் அறுவடை பணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

ADDED : மார் 04, 2024 06:05 AM

கம்பம்: சின்னமனுார் வட்டாரத்தை தொடர்ந்து கம்பத்திலும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. உத்தமபாளையம் வட்டாரம் மட்டும் வழக்கம் போல பின் தங்கியுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடந்து வருகிறது.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் தொழில்நுட்பம், வேளாண் இடுபொருட்கள் வழங்குவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெல் அறுவடை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சின்னமனுார் வட்டாரத்தில் துவங்கியது.
குறிப்பாக குச்சனுார், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் நகரங்களில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. கருங்கட்டான் குளப்பகுதி மட்டும் அறுவடை நடைபெறவில்லை.
இந்நிலையில் கம்பத்திலும் தற்போது அறுவடை துவங்கி தீவிரமடைந்துள்ளது. சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி ரோடு, கே.கே. பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைப் பணிகள் துவங்கி உள்ளன. ஆனால் உத்தமபாளையம் பகுதியில் வழக்கம் போல் அறுவடைப்பணிகள் பின் தங்கியுள்ளன.
வேளாண் துறையினர் கூறுகையில், 'ஆடு துறை 54 ரகம் எக்டேருக்கு 6.5 முதல் 7 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.
பிற வீரிய ஒட்டு ரகங்களும் மகசூல் நன்றாக உள்ளது. விலையும் மூடைக்கு ரூ.1600 வரை கிடைத்து வருகிறது.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நெல் சாகுபடி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நுகர்வோர் வாணிக கழகத்தை வலியுறுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்து உள்ளோம்.', என்றனர்.