/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்கு மார்ச் வரை தண்ணீர் வழங்க உடன்பாடு: பெரியாறு அணையில் இருந்து பெறும் நீர் 600 கனஅடியாக குறைப்பு

ADDED : ஜன 14, 2025 05:59 AM
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் நெல் சாகுபடி இருபோகம் நடைபெற்று வருகிறது. ஆண்டிற்கு ஆண்டு பெரியாறு அணை பாசனத்தில், பாசன பகுதிகள் விரிவுபடுத்துவதால் கம்பம் பள்ளத்தாக்கில் இரு போகத்திற்கு சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாவது போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் தேவைப்படும். ஆனால் அணையில் இருந்து விநாடிக்கு 933 கனஅடி நீர் எடுக்கப்படுகிறது. தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 123 அடியாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இரண்டாம் போக சாகுபடி கேள்விக்குறியாகும்.
எனவே, அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறைக்கவும், மார்ச் 15 வரை கம்பம் பள்ளத்தாக்கிற்கு தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யவும், அணையில் தேவையான நீரை இருப்பு வைக்கவும் வலியுறுத்தி உத்தமபாளையம் நீர்வளத்துறை அலுவலகம் முன் ஜன., 20 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது.
பேச்சு வார்த்தையில் தீர்வு
இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று காலை உத்தமபாளையம் நீர்வளத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எம்.பி. தங்க தமிழ் செல்வன் முன்னிலையில், செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற் பொறியாளர் மயில்வாகனன், பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க தலைவர் தர்வேஷ் முகைதீன் செயலாளர் சகுபர் அலி,விவசாய சங்க தலைவர்கள் நாராயணன் ( கம்பம் ), ராஜா ( சின்னமனூர் ) கிருஷ்ணமூர்த்தி ( கூடலூர்), ஆம்ஸ்ட்ராங் ( சீலையம்பட்டி ) கம்பம செயலாளர் சுகுமாறன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.பி. யின் கோரிக்கையை ஏற்று மார்ச் 15 வரை கம்பம் பள்ளத்தாக்கிற்கு தண்ணீர் வழங்குவதற்கு நாளை ஜன.,15 முதல் முதல் அணையில் இருந்து எடுக்கும் நீரின் அளவு 660 கன அடியாக குறைப்பதாகவும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சம்மதம் தெரிவித்தார். இந்த உறுதிமொழியை தொடர்ந்து போராட்டத்தை விலக்கி கொள்வதாக விவசாய சங்கம் அறிவித்தது.