/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது கவனம் தேவை வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

ADDED : அக் 10, 2024 05:24 AM
தேனி : வேளாண்மையில் அதிக மகசூல் பெறவும், நோய்கள், பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை தெளிக்கும் போது விவசாயிகள் போதிய பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். அதனை தெளிக்கும் போது பாதுகாப்பு உடைகள், ரப்பர் காலணி, கையுறைகள் கட்டாயம் அணியவேண்டும்.
முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளை மருந்துகளை கையாள அனுமதிக்க கூடாது. மருந்துகளை அதற்குரிய இடத்தில் மட்டும் வைக்க வேண்டும்.
பயன்படுத்திய காலி மருந்து பாட்டில்களை நீர்நிலைகள், வயல்களில் வீசக்கூடாது. மருந்து தெளிக்கும் போது உணவு சாப்பிடுதல், குடிநீர் அருந்த கூடாது. காற்று வீசும் திசையில் மருந்து தெளிக்க வேண்டும். அடைபட்ட நாசில்களை வாயால் ஊதி சுத்தம் செய்யக்கூடாது.
மருந்து தெளிக்கும் போது ஒருவர் உடன் இருக்க வேண்டும். மருந்து தெளிப்பான்களில் உள்ள பூச்சி கொல்லி மருந்துகளை பாசன கால்வாய், குளங்களில் கொட்டக்கூடாது.
மருத்து தெளிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம். என கூறப்பட்டுள்ளது.