/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நடவுக்கு தயார் நிலையில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் கண்டுகொள்ளாத வேளாண் துறை

ADDED : மே 20, 2025 01:32 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வனச்சரக அலுவலக வளாகத்தில் வளர்ந்த நிலையில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடவுக்கு விநியோகிக்கப்படாமல் சில மாதமாக இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அருகே உள்ள இந்த அலுவலக வளாகத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வனத்துறை மூலம் 12 ஆயிரம் மகாகனி, 2 ஆயிரம் செம்மரம், 1500 தேக்கு மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. இவை ஆறு மாதம் வளர்ந்த நிலையில் உள்ளன.
வனத்துறையினர் கூறியதாவது: தற்போது வளர்ந்த நிலையில் உள்ள மரக்கன்றுகள் பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமனூர் வேளாண் துறை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வளர்க்கப்பட்டது. தற்போதைய நிலை குறித்து வேளாண்துறைக்கு பலமுறை நினைவூட்டப்பட்டுள்ளது. ஆனால் மரக்கன்றுகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இல்லை. மரக்கன்றுகளை வனத்துறை தொடர்ந்து பராமரிக்கிறது. இதே நிலை நீடித்தால் மரக்கன்றுகளின் வேர்கள் தற்போது வைக்கப்பட்டுள்ள இடத்தில் பதிந்து கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படும். வரும் தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவு செய்வது தொடர் வளர்ச்சிக்கு ஏற்றதாகும் இவ்வாறு கூறினார்.