/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரத்யேக அடையாள அட்டை பெற வேளாண்துறை அறிவுறுத்தல்
/
பிரத்யேக அடையாள அட்டை பெற வேளாண்துறை அறிவுறுத்தல்
ADDED : ஏப் 05, 2025 05:29 AM
ஆண்டிபட்டி: மத்திய, மாநில அரசு திட்டங்களின் பலன்பெற வசதியாக விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கும் அடையாள அட்டை பிரத்யேக எண் ஆகியவற்றை வாங்கி பயனடையுமாறு வேளாண்மை துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆண்டிபட்டி வேளாண் துறையினர் கூறியதாவது:
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 8000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகளின் ஒருங்கிணைப்புக்காக ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள அட்டை, பிரத்யேக எண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முகாம் ஆண்டிபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுவரை 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை பதிவு செய்து அடையாள அட்டை பிரத்தியேக எண் பெற்றுள்ளனர்.
வரும் காலங்களில் அடையாள அட்டை, பிரத்யேக எண் இருந்தால் மட்டுமே விவசாய கடன், மத்திய, மாநில அரசு திட்டங்களின் பலன் ஆகியவற்றை பெற முடியும்.
எனவே அனைத்து விவசாயிகளும் முகாமில் பங்கேற்று தங்களை பதிவு செய்து பிரத்யேக எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.

