/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர் விளைச்சல் போட்டிகளில் ரகசியம் காக்கும் வேளாண் துறை
/
பயிர் விளைச்சல் போட்டிகளில் ரகசியம் காக்கும் வேளாண் துறை
பயிர் விளைச்சல் போட்டிகளில் ரகசியம் காக்கும் வேளாண் துறை
பயிர் விளைச்சல் போட்டிகளில் ரகசியம் காக்கும் வேளாண் துறை
ADDED : ஜூன் 21, 2025 12:40 AM
கம்பம்: வேளாண் துறையில் பயிர் விளைச்சல் போட்டி தகவல்களை ரகசியமாக கையாள்வது புரியாத புதிராக உள்ளது.
வேளாண், தோட்டக்கலைத்துறை சார்பில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்த மாநில, மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
நெல், கரும்பு, துவரை, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது. நிலக்கடலை, கரும்பு, பருத்தி மாநில அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மாவட்ட அளவில் நெல், கரும்பு, நிலக்கடலை, பருத்தி பயிர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கும் போட்டி உள்ளது.
முன்பு பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்ற விவசாயி நிலத்தில், பயிர் அறுவடை செய்ய அதிகாரிகள் செல்லும் போது, அறிவிப்பு செய்து பத்திரிகையாளர்களையும் அழைத்து சென்று அறுவடை செய்து மகசூல் விபரம் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.
இரு ஆண்டுகளுக்கு முன் சின்னமனூர் பொட்டிபுரத்தில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி சாகுபடி செய்த விவசாயி நிலத்தில் அறுவடை செய்தனர். ஆனால் முடிவுகள் இதுவரை தெரியவில்லை.
சமீபத்தில் கடமலைகுண்டில் கம்பு சாகுபடியில் விவசாயி சாதனை மகசூல் எடுத்து மாநில அளவில் பரிசு பெற்றுள்ளார். ஆனால் அதையும் வெளிப்படுத்தவில்லை. அறுவடை முடிந்தாலும், அதன் முடிவுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.அங்கு மாநில மற்றும் ஒவ்வொரு மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுகிறார். அதுவும் பொது அறிவிப்பு செய்யாமல் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு தபால்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகளை ஊக்கப்படுத்த நடத்தப்படும் பயிர் விளைச்சல் போட்டி முடிவுகளை ரகசியம் காக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.-
பல அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதும் தெரியவில்லை என்ற பதில் அளிக்கின்றனர்.