/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடை செய்யப்பட்ட, காலாவதியான பூச்சி மருந்துகள் விற்பனையா வேளாண் துறை ஆய்வு தேவை

ADDED : நவ 25, 2024 06:10 AM
தேனி : 'மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, காலாவதியான பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா' என, வேளாண் துறையினர் ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், போடி, தேனி, வீரபாண்டி பகுதிகளில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இது தவிர காய்கறி பயிர்கள், பூக்கள் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பூச்சி மருந்து தெளிக்கும் போது உயிரிழப்புகள் ஏற்படுவது மாவட்டத்தில் வாடிக்கையாக உள்ளது.
இதனை தவிர்க்க கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பது, அதனை எவ்வாறு கையாள்வது, மருந்து தெளிக்கும் போது மேற்கெள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி பயிற்சிகள் வழங்கி, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதே போல் உரங்கள், மருந்துகள் விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகளில் ஆய்வு நடத்தி தடைசெய்யப்பட்ட, காலாவதியான பூச்சி மருந்துகள் விற்கப்படுகிறதா என்பதையும் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.