/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடி கம்பம் பீடம் இடிப்பு அ.தி.மு.க., புகார்
/
கொடி கம்பம் பீடம் இடிப்பு அ.தி.மு.க., புகார்
ADDED : ஜூன் 29, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: மாநிலம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இடையூறாக இருக்கும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், பீடங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கம்பத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது. ஆனால் கொடிக்கம்பங்கள் இருந்த பீடங்கள் அகற்றப்படவில்லை
இந்நிலையில் மெயின்ரோட்டில் டிராபிக் சிக்னல் அருகில் இருந்த அ.தி.மு.க. கொடி கம்ப பீடம் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
நேற்று காலை பீடம் இடிக்கப் பட்டதை அறிந்து அ.தி.மு.க. லினர் கொந்தளித்தனர். நகர் செயலாளர்கள் கார்த்திக் , கணபதி கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.