/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரையில் படுத்து எதிர்ப்பை தெரிவித்த அ.தி.மு.க., கவுன்சிலர் ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ADDED : நவ 30, 2024 06:25 AM
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் தரையில் படுத்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போதிய கவுன்சிலர்கள் வராததால் கோரம் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சந்திரகலா தலைமையில் துவங்கியது. துணைத் தலைவர் ஜோதி, செயல் அலுவலர் வினிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க., 9, அ.தி.மு.க.,6, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1, வி.சி.க., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். பேரூராட்சி கூட்டத்திற்கு தி.மு.க.,4, அ.தி.மு.க., 3, வி.சி., 1, இந்திய கம்யூ.,1 மட்டும் வந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் 3 வதுவார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் பாலமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். தனது வார்டு பாப்பம்மாள்புரம் பகுதியில் கழிவு நீர் வடிகால் அமைக்க சில மாதங்களுக்கு முன் ரூ.9 லட்சம் மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்பட்டதாகவும், பணிகளை துவக்கிய ஒப்பந்ததாரர் கழிவுநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டி, அதன்பின் பணிகளை மேற்கொள்ளாமல் விட்டு சென்றார். தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுவதுடன் குழந்தைகள், முதியவர்கள் பள்ளத்தில் விழுந்து பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து நிர்வாகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.
தனது புகார் குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி இருக்கையில் இருந்து எழுந்து தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து சில கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். கூட்டத்திற்கான கோரம் இல்லாததை சுட்டிக்காட்டி கூட்டத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தலைவர் தெரிவித்தனர்.