/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருமுனை பிரசார கூட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு
/
தெருமுனை பிரசார கூட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு
ADDED : பிப் 14, 2025 12:52 AM
தேனி; மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் 2026 சட்டசபை தேர்தல் வரை வெள்ளி கிழமைகளில் மாலையில் தெரு முனை பிரசாரக்கூட்டம் நடத்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேனி அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை பிப்.,21 முதல் கொண்டாடுவது, ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பூத் கமிட்டியை பலப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் 2026 சட்டசபை தேர்தல் வரை வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெயக்குமார், ஐ.டி., பிரிவு மண்டல துணை தலைவர் பாலசந்தர், மாவட்ட அவைத்தலைவர் முருகன், துணைச் செயலாளர் சோலைராஜ், கூடலுார் நகர செயலாளர் அருண்குமார், பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன், தேனி நகர துணைச்செயலாளர்
சுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள்பங்கேற்றனர்.

