/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல்முறை ஓட்டளிக்கும் இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்க வேண்டும் அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் பேச்சு

ADDED : நவ 23, 2024 06:25 AM

தேனி, ; ' முதல் முறை ஓட்டளிக்கும் இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்,' என தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் பேசினார்.
தேனி அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில், உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, பூத் கமிட்டி அமைப்பு ஆலோசனைக் கூட்டம் மதுராபுரியில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார்.
தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், '' 9 பேர் கொண்ட ஓட்டுச்சாவடி கமிட்டி அமைக்க தலைமை உத்தரவிட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் அனைத்து ஓட்டுச்சாவடிக்கும் ஒரு ஒட்டுச்சாவடி செயலாளர் தலைமையில் 9 பேர் கொணட நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இதில் செயலாளர் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முதல் முறை ஓட்டளிக்கும் இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைப்பதோடு இளம்பெண்களை இணைப்பது அவசியம். இதற்காக வயதானவர்கள் சோர்வடையகூடாது. வயதானவர்களும் கட்சிப்பணி ஆற்றலாம்.
2026 தேர்தலில் கட்சி தலைமை வலுவான கூட்டணி அமைத்துக் கொடுக்கும். யாரும் அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம்'', என்றார்.
நிகழ்வில் கட்சி அமைப்புச் செயலாளர் செம்மலை, மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., பார்த்திபன் மாநில ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், நகரச் செயலாளர்கள் பழனியப்பன், அருண்குமார், ஒன்றிய செயலாளர் லோகிராஜன், வரதராஜன், ராஜகுரு, நாராயணசாமி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.