/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்
/
நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்
நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்
நாளை அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி ஆண்டிபட்டியில் பிரசாரம்
ADDED : செப் 03, 2025 01:09 AM
தேனி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை இரவு( செப்.4ல்) ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி,'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என சட்டசபை தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அவரது 4ம் கட்ட பயணத்தில் தேனி மாவட்டத்திற்கு நாளை வருகிறார். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே நாளை இரவு 8:00 மணிக்கு பேசுகிறார்.
செப்.,5 காலை 10:00 மணிக்கு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் விவசாயிகள், தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4:00 மணிக்கு கம்பம், மாலை 6:30 மணிக்கு போடி தேவர் சிலை அருகே பேசுகிறார்.
இரவு 8:30 மணிக்கு தேனி பங்களாமேட்டில் பேசுகிறார். இவரது பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன் தலைமையில் நகர, ஒன்றிய நிர்வாகிள் மேற்கொண்டுள்ளனர்.