/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூத் கமிட்டி செயல்பாடு அ.தி.மு.க., ஆய்வு
/
பூத் கமிட்டி செயல்பாடு அ.தி.மு.க., ஆய்வு
ADDED : மே 10, 2025 07:35 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து மேலிட நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் கிராம வாரியாக 9 பேர் கொண்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு, ஜி.உசிலம்பட்டி, ஒக்கரைப்பட்டி, மொட்டனூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி கிராமங்களில் மாவட்ட செயலாளர் ராமர், தொகுதி பொறுப்பாளர் ரதிமீனா சேகர், ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் முன்னிலையில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டியில் உள்ளவர்களின் விபரங்கள், அவர்களுக்கான அடையாள அட்டைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். ஜெ., பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் மதியரசன், ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் கவிராஜன், மாயாண்டி, தகவல் தொடர்பான ஒன்றிய செயலாளர் ராஜபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.