/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் அ.தி.மு.க., வினர் போராட்டம்
/
ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் அ.தி.மு.க., வினர் போராட்டம்
ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் அ.தி.மு.க., வினர் போராட்டம்
ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் அ.தி.மு.க., வினர் போராட்டம்
ADDED : ஜன 24, 2025 05:23 AM
சின்னமனூர்: ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் பகுதியில் எம்.ஜி.ஆர். கூட்டரங்கு என்று இருந்த எழுத்துக்களை மறைந்து தமிழ் வாழ்க என்ற போர்டு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வினர் போராட்டம் நடத்தினர்.
ஓடைப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டடத்தின் முன் பகுதி சுவற்றில் எம்.ஜி.ஆர். கூட்டரங்கு என்று இருந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் வாழ்க என்ற போர்டு முன்பக்க சுவரில் பொருத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். கூட்டரங்கு என்ற எழுத்துக்களை மறைத்து வைக்கப்பட்டது.
இதையறிந்த அ.தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் மனோகரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி பேச்சு வார்த்தை நடத்தி கூறுகையில் , 'தமிழ் வாழ்க என்ற போர்டை பொருத்தும் போது தவறுதலாக எம்.ஜி.ஆர். கூட்டரங்கு மறைக்கப்பட்டது. தற்போது அந்த போர்டை கழற்றி அலுவலக மேல் பகுதியில் வைக்க கூறியுள்ளேன் என்றார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.

