/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2002 வாக்காளர் பட்டியலை வழங்க அ.தி.மு.க., மனு
/
2002 வாக்காளர் பட்டியலை வழங்க அ.தி.மு.க., மனு
ADDED : நவ 11, 2025 04:09 AM
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன் கூறியதாவது: சிறப்பு வாக்காளர் திருத்த பணியின் போது வழங்கப்படும் படிவத்தில் 2002 தேர்தல் தொடர்பான கேள்விகளை பூர்த்தி செய்ய வாக்காளர்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக 2002 தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதி இருந்தது. தற்போது தேனி சட்டமன்ற தொகுதியில் இருந்த ஒரு பகுதி பெரியகுளம் தொகுதியிலும், மற்றொரு பகுதி போடி தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 2002 தேனி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சியினருக்கும் வழங்க வேண்டும் என்றார். போடி மேற்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, நகர செயலாளர் வாசு, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடனிருந்தனர்.

