/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி துாய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை வினியோகம்
/
ஊராட்சி துாய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை வினியோகம்
ஊராட்சி துாய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை வினியோகம்
ஊராட்சி துாய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை வினியோகம்
ADDED : நவ 11, 2025 04:08 AM
தேனி: ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர்களுக்கு நலவாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் பணியின் போது உயிரிழந்தால் ரூ. 5லட்சம் இழப்பீடு, உடல் உறுப்புகள் இழந்தால் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் 997 துாய்மை காவலர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு 2ம் கட்டமாக நலவாரிய அட்டை வழங்கும் பணி நேற்று துவங்கியது. அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக 428 பேருக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 371 பேருக்கு அட்டைகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 198 பேருக்கு விரைவில் வழங்க உள்ளோம் என்றனர்.