/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி முகாம்
/
அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி முகாம்
ADDED : நவ 12, 2025 12:26 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் ரதிமீனா சேகர் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அரசு மூலம் நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்கும் படிவங்கள் வாக்காளர்களிடம் முறையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பது குறித்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் ஓட்டு சாவடி நிலை அலுவலர்களிடம் கொண்டு சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் தகுதியான ஓட்டுகளை சேர்த்தல், இறந்தவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் பெயரை நீக்குதல், கட்சியினரின் ஓட்டுகள் சரியாக உள்ளதா போன்ற விபரங்களை அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டனர். பேரூராட்சி முன்னாள் தலைவர் சேட்டு அருணாசலம் நன்றி கூறினார்.

