/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப் பாதையை முன்கூட்டியே ஒருவழிப் பாதையாக அறிவிக்க வலியுறுத்தல்! சபரிமலை சீசனில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை

ADDED : நவ 12, 2025 12:25 AM

சபரிமலையில் மண்டல பூஜை நவ.17ல் துவங்குகிறது. இதற்காக கோயில் நடை நவ.16 மாலை திறக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். குமுளி மலைப் பாதை வழியாக பக்தர்களின் வாகனங்கள் கூடுதலாக செல்லும். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும்.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். 3வது கி.மீ.,ல் கொண்டை ஊசி வளைவு அருகே சமீபத்தில் ரோடு விரிசல் ஏற்பட்டது. சீசன் துவங்க உள்ள நிலையில் முன்கூட்டியே இதனை சீரமைக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மணல் மூடையை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். இது விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் நிரந்தரமாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் சீசன் துவங்க மூன்று நாட்களே உள்ள நிலையில் தற்போது அவசரகதியில் சீரமைப்பு பணியை செய்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் கூடலுார், கம்பம் உள்ளிட்ட பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் சென்று திரும்புகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர ஜோதி விழா நேரங்களில் மட்டும் குமுளி மலைப் பாதையை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்படும்.
ஆனால் தற்போது பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் வரும் வாய்ப்புள்ளதால் முன்கூட்டியே ஒருவழிப் பாதையாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சபரிமலை சீசன் முடியும் வரை மலைப்பாதையில் பொருட்கள் ஏற்றி செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.