/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி விமானப்படை, கப்பற்படை அணி வெற்றி
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி விமானப்படை, கப்பற்படை அணி வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி விமானப்படை, கப்பற்படை அணி வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி விமானப்படை, கப்பற்படை அணி வெற்றி
ADDED : மே 20, 2025 01:30 AM

பெரியகுளம்: அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை, கப்பற்படை அணி வெற்றி பெற்று, லீக் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.
பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் பி.டி.சி., நினைவு கூடைப்பந்து நாக் அவுட் போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும் மோதின.
வருமானவரித்துறை அணி 85:51 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை இந்தியன் வங்கி அணியும், புதுடில்லி இந்திய தரைப்படை அணியும் மோதின.
இந்தியன் வங்கி அணி 78:68 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. லோனாவாலா இந்திய கப்பற்படை அணியும்,
பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணியும் மோதின. கப்பற்படை அணி 76:46 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. புது டில்லி இந்திய விமானப்படை அணியும், சென்னை விளையாட்டு விடுதி அணியும் மோதின.விமானப்படை அணி 93:80 புள்ளி கணக்கில் வெற்றியை வசமாக்கியது. நாக் அவுட் போட்டியில் 22 அணிகள் விளையாடியது.
இதில் இந்திய விமானப்படை, கப்பற்படை, இந்தியன் வங்கி, வருமானவரித்துறை அணிகள் லீக் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று(மே 20) அரையிறுதி போட்டியும், நாளை நிறைவு நாள் போட்டி நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.